மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Wednesday 14 September 2011

தேர்வு

அவள் பெயர்
"தேர்வு"
என்னைப்
பயமுறுத்தியவளும் அவள்தான்,
பயனளித்தவளும் அவள்தான்!

நான்
விவரமாறியா காலதிலிருந்தே
விரட்டி விரட்டி காதலிக்கும்- என்
வித்தக காதலி இவள்!

இவளை அறியாதோர்
இவ்வையகத்தில் இல்லை!


பட்டி தொட்டியின் பள்ளிகள் முதல்
பன்னாட்டு பல்கலைகழகங்கள் வரை
பாதகத்தி இவள் பேச்சு தான்,
பாரெங்கும் இவள் ஆட்சி தான்!
இதனால் தான் என்னவோ- நான்
இவளிடம் "காதல் கொண்டேன்"

ஆனால்
என் காதல்
என்றுமே "ஒரு தலை காதல்" தான்!

காரணம்,
என்னைக் காணவரும் இவளுக்கு
காதல் வந்ததில்லை காலளவுக்கு!

எம் பள்ளிப் பருவத்தில்
ஆண்டொன்றுக்கு ஆறு முறைக்கு மேல்
அவள் வந்ததில்லை,
ஆனால் கல்லூரி கணக்கெடுப்பின் படி
ஆறு மாதத்திற்குள் அறுபது முறை
வந்து விடுகிராள்!

இவளிடம் மூன்று மணி நேரம் பேச
முழு இரவும் முழித்திருந்து இன்னலுடன்
தயார் செய்வேன் என்னை!


இவளைக் காணும் வரை
நெஞ்சிலே ஓர் ஏக்கம்!
இவளைக் கண்ட பிறகோ
கண்ணிலே நீர் தேக்கம்!

காரணம்,
இவள் கூறும்
"முடிவு" அப்படி!

துக்கமான நிமிடங்கள்
தூக்கமில்லா இரவுகள் என
துடித்திருக்கிரேன் எத்தனையோ நாட்கள்,
இருந்தும் இவள் மனம்
இறங்கியது இல்லை!

இவள் கூறும் முடிவு
கரும்பலகையில் தான்
ஒட்டபடும்- காரணம்
கருப்பு தான்
துக்கத்தின் நிறமாயிற்ரே!

பள்ளங்கள் பல இருந்தாலும்
உள்ளம் நெகிழ்ந்து
உன்னிடம் உவகையோடு வந்தேன்
உதாசீனப்படுத்தினாய்!

உன் பெயரை கேட்டாலே
ஆண்களின் அடிமனதில்
அச்சம்!
அதன் காரணம் தான் என்ன?
பெண்கள் யாவரும் உன்
தோழிகள் என்பதாலா?

நீ வருகிறாய் என்று தெரிந்தால்
மாணவர்கள் பலர் மாயமாகின்றனர்,
அதன் மாயம் தான் என்ன?

பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சலுக்கு
மருந்து கண்டுபிடிதாலும்,
தேர்வு காய்ச்சலுக்கு மட்டும்
மருந்து இல்லை என
மழுப்புகிறார்களே...?
என்ன கொடுமை இது...?

தேர்வு எழுதி தேர்ச்சி
பெறுவதும்,
தேரை இழுத்து தெருவில்
விடுவதும்,
பலருக்கும்மிங்கு பழகிப்
புளித்து விட்டது...!

முன்பெல்லாம்
உன்னால் பல ஆசிரியர்களும்
பேராசிரியர்களும் உருவாகினர்,
இன்றெல்லாம்
உன்னால் பல கதாசிரியர்கள்
உருவாகின்றனர்!!
என்ன ஒரு முன்னேற்றம்!!

சிகப்பு, மஞ்சள், பச்சை என
நிதம் ஒரு நிறத்தில்
வருகிறாய்!

உன் அழகைப்
பார்த்து வியந்து
படித்ததை மறந்து
பாழாய் போகின்றோம்,
பாவம் நாங்கள்!!

இவள் என்னை ஏற்க மறுப்பதால்
என் வீட்டிலும் என்னை ஏற்க மறுக்கிறார்கள்!
இவளது எதிர்மறை முடிவால், நான்
எதிரியாகிரேன் என் கல்லூரி நிர்வாகத்திற்கு!
இருந்தும் இவளை இன்றளவும்
காதலிக்கிறேன் கண்மூடித்தனமாக!

"தேர்வே" என் காதலியே
தேவதையே என்னைக் காதலியேன்!
முழுமனதொடு என் காதலே ஏற்று
முழு விழுக்காடு தேர்ச்சி பெறுவேன் என
நம்பிக் காத்திருக்கும்

"லெனால்டு கிறிஸ்து ராஜ்"
லெனால்டு கிறிஸ்துராஜ்
மூன்றாமாண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை

No comments:

Post a Comment