மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Wednesday 14 September 2011

மாணவன்

கடல் அலைபோல்
ஓயாத ஆர்ப்பாட்டம்
மாணவப் பருவம்

கொஞ்சம் குறும்பு
நிறைய மகிழ்ச்சி
அடங்காத திமிர்
அத்தனைக்கும் சொந்தக்காரர்கள்

நீங்கள் செய்யும் சேட்டைகள்
ஏராளம்
நான் சொல்லவா
ஏராளம்


புரட்டைத்தலைப் பித்தன்
கனவு காணச்சொன்னதை
மெய்ப்பிக்கிறார்கள்
மதியவேளை வகுப்பறையில்
கண்ணைத் திறந்துகொண்டு
கனவு காணும்
நவீனச் சித்தர்கள்

பிள்ளையார் சுழிபோட்டு
பிழையாக நீ எழுதிய
தேர்வுத்தாளைப் பார்த்து
பைத்தியம் பிடித்தது
ஆசிரியருக்கு

புகைவண்டி நிலையத்தின்
ஆராவாரச் சத்தம்
மணியடித்ததும்
மயான அமைதி
மௌன ஊர்வலத்தில்
மூகாரிராகம் ஒலிக்கிறது
திரித்திரிப் பொம்மக்கா
தில்லாலங்கடி பொம்மக்கா
ஆசிரியர் வருகிறார்
தெரியாமா மறைஞ்சுக்கோ
இப்படி
கண்ணைக்கட்டி வித்தைகாட்டும்
சித்து விளையாட்டு
தேர்வு அறையில்

மாணவனின் தேர்வுத்தாள்
சரியாக எழுதவில்லை
காரணம் கேட்டேன்
முந்தையநாள் கிரிக்கெட் போட்டியில்
இந்தியா வென்றது
மகிழ்ச்சியில் படிக்கவில்லை
பின்னொருநாளில்
மற்றொரு மாணவன்
சரியாக எழுதவில்லை
காரணம் கேட்டேன்
இந்தியா தோல்வியடைந்தது
துக்கத்தில் படிக்கவில்லை

மகிழ்ச்சியோ துக்கமோ
படிக்கமாட்டேனென்று
சத்தியப் பிராமாணம் செய்கிறான்
புத்தகத்தில்

கல்லூரி பண்டகசாலை
படிப்பு லட்டு உருண்டை
மாணவர்கள் எறும்பு
இனிப்பை நாடும் எறும்புபோல
படிப்பை நாடனும் மாணவர்களே

ஆதிமனிதன்
அவதாரம் எடுத்திருக்கிறான்
கால்ச்சட்டைப் பையில்
வால்முளைத்த
அடையாள அட்டை

வேடந்தாங்கல் பறவைகளின்
விநோதச் சத்தம்
நூலகத்தில்
அண்ணல் அம்பேத்கர்
அறிஞர் அண்ணாவை
ஈன்றெடுத்த கருவறை

சரஸ்வதியை விற்று
சரக்கு வாங்கும் இளைஞனே
சற்று யோசித்துப்பார்
நீ குடிப்பது சரக்கல்ல
சயனைடு குப்பி

சுடுகாட்டில் நிம்மதியில்லை
தாத்தாவுக்கும் பாட்டிக்கும்
அடிக்கடி விடுப்பெடுக்கும்
பேரக்குழந்தை

கிரிக்கெட் மைதானம்
அரசுப்பேருந்து
சாதாரணமாக
ளiஒநச அடிக்கிறாய்
அசாதாரணமாக
ரன் எடுக்க முடியாமல்போனால்
ழரவ ஆகிவிடுவாய் மவனே
ஆள் ழரவ ஆகிவிடுவாய்

பட்டுவண்ண நூலெடுத்து
பக்குவமாய் நெசவுசெய்யும் பிரம்மா
ஆசிரியர்
உன்னை உருவாக்கும்
ஆசிரியரை மதி
படைப்பின் ரகசியத்தைக்
கற்றுக்கொள்

கர்மவீரர் காமராசர்
பேரறிஞர் அண்ணா
நாட்டை ஆளும்வரை
அரசியல் புனிதம்
தற்காலிகமாக
சாக்கடைநீர் சங்கமித்திருக்கிறது
துப்புரவு செய்வது
மாணவர்களின் கடமை

பழுத்தபழம் உதிர்த்தது
ஒருவார்த்தை
இந்தியா
2020-இல் வல்லரசாகும்
இளந்தளிரே
இன்னுமா தயக்கம்
2015-குள்
கனவை நனவாக்கு

ஆசிரியராகத் துடிக்கும்
அறிவாளர்களே
விண்ணில் ஏவுகணைவிடும்
விஞ்ஞானிகளே
வருங்கால முதலமைச்சர்களே
நாளைய நட்சத்திரங்களே
உங்கள் கனவு நனவாக
வாழ்த்துக்கள்
முத்து லட்சுமி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை

No comments:

Post a Comment