மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Wednesday 14 September 2011

கல்லூரி


கனவுகளுக்கு சிறகு முளைக்கும் காலம்

கண்கள் வழியே பார்த்த உலகம்
கல்லூரி வழியே இன்னும் பெரிதாய்.

மறுபடி ஒருமுறை வரக்கூடாதா என
கடந்து சென்றவர்களும்
கடந்துவிடக் கூடாது என
வெளியேறப் போகிறவர்களும்
என்னவென்றே தெரியாமல்
புதியவர்களும் எண்ணிக் கொண்டிருக்கும் களம்.

தேர்வு

அவள் பெயர்
"தேர்வு"
என்னைப்
பயமுறுத்தியவளும் அவள்தான்,
பயனளித்தவளும் அவள்தான்!

நான்
விவரமாறியா காலதிலிருந்தே
விரட்டி விரட்டி காதலிக்கும்- என்
வித்தக காதலி இவள்!

இவளை அறியாதோர்
இவ்வையகத்தில் இல்லை!

வகுப்பறை

வகுப்பறை ஓர் கருவறை.
இதில் கருக்கொண்டு
உயிர்த்தெழும்
உயிர்கள் எத்தனை எத்தனை!

ஆண்டு தோறும் சூல் கொண்டு
உயிர் சுமக்கும் தாய் அவள்.

மாணவன்

கடல் அலைபோல்
ஓயாத ஆர்ப்பாட்டம்
மாணவப் பருவம்

கொஞ்சம் குறும்பு
நிறைய மகிழ்ச்சி
அடங்காத திமிர்
அத்தனைக்கும் சொந்தக்காரர்கள்

நீங்கள் செய்யும் சேட்டைகள்
ஏராளம்
நான் சொல்லவா
ஏராளம்

Friday 9 September 2011

சமச்சீர்க் கல்வி

நீதியும் வெல்லும்
எப்போதாவது.
சமமும் இல்லாமல்
சீரும் இல்லாமல்
கல்வி இருந்த நிலை மாற
உச்சநீதி மன்றம் வழங்கிய
உச்சபட்ச நல்ல தீர்ப்பு
சமச்சீர் கல்வி.

அரசியலில் கல்வி அவசியம்
கல்வியில் அரசியல் அனாவசியம்
என்பதை அனைவருக்கும்
உணர்த்திய தீர்ப்பு.