மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Wednesday 23 November 2011

சமச்சீரக்கல்வி

ஜுன் மாதம்-
படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்
மாணவர்கள்!
புத்தகத்தைக் கொடுக்க வேண்டுமென்ற
வருவத்தில் அரசு!
   
ஆரம்பமே அபசகுனமாய்
சூரியனைக் காணவில்லை!
தேர்தலில் மட்டுமல்ல
பாடப்புத்தகத்திலும்
தொலைந்துவிட்டது...



இமாறல வெற்றிபெற
இலையையும்
கிள்ளிவிட்டார்கள்
பிஞ்சிலே
பழுத்துவிடக்கூடாது
என்ற நல்லெண்ணம்...

சுழலும் பம்பரமும்
தித்திக்கும் மாம்பழமும்
போனதிக்கு யாரறிவார்?

மாணவர்கள் செய்யும்
பெரும்பனியாம்
படித்து கிழிப்பதென்பது...
அப்பெரும்பணியை அரசே ஏற்று
ஒருபடி மேலேபோய்
படிக்கப்படாமலே
பல பக்கங்கள்
கிழிக்க்ப்பட்டன...

பாடப்புத்தகங்களைத் திறந்தால்
பச்சை பச்சையாய்
பல பக்கங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
கண்ணுக்குத் தெரிந்த
பக்கங்களை விட
மறைக்கப்பட்டுள்ள பக்கங்களை
படிக்கவேண்முமென்ற
ஆர்வம்தான் அதிகமாக
இருக்கிறது.

இந்த
அரசியல் குழப்பத்தில்
வேண்டா வெறுப்பாகப் பிறந்த
அழகுக்குழந்தை- சமச்சீர்க் கல்வி...

காலதாமாமாய்ப் பிறந்தாலும்
ஊனம் எதுவும் இல்லையென்ற
நிபுணர் குழுக்களின் அறிக்கை
மகிழச்சியளிக்கிறது....

ஏழைக்கும்
பணக்காரனுக்கும்
ஒரேமாதிரியான கல்வி என்று
பாமரர்வரை புரிந்திருக்கிறது...

எதுவுமே சமம் இல்லாத
இந்த தேசத்தில்
சமச்சீர்க் கல்வி என்ற வார்த்தை
இன்பத் தேனாக காதினிலே பாய்கிறது...

பிச்சைபுகினும் கற்கை நன்றே!
அதற்காக
பிள்ளைகளின் படிப்பிற்காக
பிச்சையெடுக்காத குறையாய்
பெற்றோர்கள்!

மனசாட்கியே இல்லாமல்
அதைப்பிடுங்கும் அனுமார்களாய்
தனியார்ப் பள்ளி நிறுவனங்கள்!
நெஞ்சுபொறுக்குதில்லை...

நடுத்தரவர்க்கத்து
பெற்றோர்களின் கனவை
முதலீட்டாக்கி
பசியடங்கா பணமுதலைக்களாய்
கொள்ளை இலாபம் சம்பாதித்த
தனியார்ப் பள்ளி நிறுவனங்களுக்கு
நெற்றிப்பொட்டில் வைக்கும்
ஓத்தரூவாக்காசானது
நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஒன்றா? இரண்டா?
கண்டுகொள்ளாமல் செல்ல...
இருபதுகோடி குழந்தைகளின்
வாழ்வுரிமைக் கல்வியை
இந்தப் புதிய அரசு
மறுப்பதென்பது
பச்சைக் குழந்தைகளின் கருவை
வேரறுக்கின்ற வேலை!
இந்த வேலையை- நம்
அரசே செய்வதுதான் வேதனை!
இந்த வேதனைக்கு
தீர்வு தந்தது
நீதிமன்றத்தின் தீர்ப்பு...
இனி நல்ல காலந்தான்...

அரசுப் பள்ளிகளின்
அடையாளங்கள்!
ஓலைக்குடிசை...
இல்லையேல்
வெள்ளைப் பூச்சுகளே அறியாத
பழைய சுவர்கள்...
உடைந்த நார்காலி...
காற்றே வராத காத்தாடி...
இத்தனைக்கும்
முத்தாய்ப்பாய்
ஆசிரியர்களே இல்லாத வகுப்பறை...
இது போதாதென்று
கருவேலங்காடுதான் கழிப்பறை...
பள்ளியின் ஓரமாக
ஓர் இருட்டறை
அதற்குப்பெயர்தான்
சத்துணவுகளைச் சமைக்கும்
சமயலறை!

பாறாங்கல்லாய்
அரிசிச் சோறு
பார்த்தா
கம்மாத் தண்ணிபோல இருக்கும்
அதற்கு
சாம்பாறென்று பெயர்
ஓடுகளறியா
பல பள்ளிகளில்
போனால் போகட்டுமென்று
ஓடுகளணிந்த முட்டைகள்
எங்கோ
இத்துப்போன கோழிகள் இட்ட
சீனிக்கல்லாய்
சின்ன சின்ன முட்டைகள்...
கால்வயிறு
அரை வயிறு சாப்பிட்டு
மேய்ப்பனும் இல்லாமல்- நல்ல
மேய்ச்சலும் இல்லாமல்
வீதிவழியே செல்லும்
திசையாம் ஆடுகளாம்- மாணவர்கள்.

இத்தனை இடர்களுக்கு மத்தியில்
தவழ்கின்ற அழகுக் குழந்தையாய்
சமச்சீர்ப் பாடத்திட்டம்!
கல்வி மட்டுமல்ல!
கற்பிக்கும் இடமும்
கற்பிக்கும் தறனும்
ஆசிரியர்களும்
அடிப்படை வசதிகளும்
தரமாக இருந்தால்

அங்கே
கல்வி மணம் கமழும்!
சமச்சீர்க் கல்வித் தரம் உயரும்!
தனியார்ப் பள்ளிகளின் ஒப்பனைகள்-
நிதி நிறுவனங்களைப்போல
பளபளக்கும் கட்டிடங்கள்!
பளிச்சென்ற சீருடைகள்!
வேணாத வேக்காட்டில்
காற்றுப்புகாத
செருப்பை மாட்டிக்கொண்டு
அடைகாத்த முட்டையிலிருந்து
அன்றுதான் நடக்கப்பழகிய
கோழிக்குஞ்சுகளாய் சிறுவர்கள்...
நாயிக்கு கழுத்தில்
கயிறாக
தொண்டையை இறுக்கும்
‘டை’ வேறு...
வெற்றுப்பாடச்சுமையோடு
புத்தகச் சுமைவேறு!
கட்டிடங்கள்
வகுப்பறைகள்
ஆசிரியர்கள்
எல்லாமே தனித்தனிதான்!
ஆனால்
கல்வி ஒன்றுதான்
கேட்கும்போதே
கரும்பாய் இனிக்கிறது!

இனி
கல்விக்களத்தில்
சமமான
சீரான
போட்டியிருக்கும்...
சமத்துவமுள்ள சமுதாயம்
நனவாயிருக்கும்!
ச. ஜெகதீஸ்வரி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை.

No comments:

Post a Comment