மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Wednesday 23 November 2011

சுனாமி

விஞ்ஞானத்தால்
விண்ணையும் தொட்டுவிடலாமென்ற
மனித எண்ணத்திற்கு
இயற்கை
கொட்டுவைத்து
தரை தள்ளிய ஒரு நிகழ்ச்சி- சுனாமி

பூமிக்குமேல் நிகழ்ந்தால்தான்
பூகம்பம் என்றிருந்தேன்..
கடலுக்கடியிலுமா நிகழும் பூகம்பம்....


கடலுக்கடியில்
பூதமொன்று எழுந்துவருவதாக
பாட்டி கதைசொன்னதுண்டு....

அந்தக் கடலடியில்
பூகம்பமும் எழுமென்றும்- அது
சுனாமியென்றும்
படித்ததில்லை...

நமக்குமுன்
படித்தோர்
கூறியதுமில்லை...

எந்தப்
பள்ளியிலும்
இந்தப் பாடமில்லை-
ஓகோ...
கல் வீடுயென்பது கறிக்குதவாது போலும்...
கல்வியென்பது கறிக்குதவாது போலும்...

நீல கடலே- மிக
நீண்டகடலே........
நீயே தாயென
நின்மடியே தஞ்சமென
வாழும் மீனவருக்கு
நிலவின் ஒளியும்
வெள்ளை அலையுமே
சங்கீதச் சாரல்கள்...

அலையின் சத்தமே
நீலாம்பரியென
உறங்கிப்போனவர்களுக்கு
முகாரி கினப்பிக்கொண்டு
ராட்ஸஸ வடிவம் பூண்டு
கரை தான்டி- மனித
இரை தேடி
உயரத்தில்............
மிக உயரத்தில்
இன்னும் உயரத்தில் நின்று
வாரினாய்
மனித உயிர்களை......
வாடி நின்றன மனித இனம்....

கடவலையைப்
பார்த்துப் பார்த்து
காட்சி இன்பம்
பருகிய கண்களால்
நம்பமுடியவில்லை
சுனாமி போன்ற
ஓர்
பேராபத்தை...
கடுகளவுதான் கலையான்களென்றாலும்
மலையளவு மலையளவு மரத்தையும்- அது
வீழ்த்திவிடும்.


ஒரிருமுறைதான்
என்றாலும்
அணுகுண்டுச் சோதனையால்
நிலச்சரவு ஏற்படும்.

மனிதர்களுக்குப் பயந்துதான்
அலைகடல் நடுவே
கடலுக்கடியில் பதுங்கியுள்ளன
பவளப்பாறைகள்.....

அதையும் தேடிப்பிடித்து
அணுகுண்டுச் சோதனையாம்
அது நாட்டுக்கு
ரொம்ப முக்கியமாம்- பல
ஆயிரங்கோடியில்
அணுகுண்டு செஞ்சு
காசை கரியாக்கியாச்சு
கடல்நிலமும்
சரிஞசு போச்சு
அலை வீச்சு
அதிகமாக- இதுவும்
ஒரு காரணமாச்சு

காடுகள்
மனிதனுக்குமட்டுமல்ல
கடலுக்கும்
பாதுகாப்பு அரண்களாம்
இமயமளவு அலைகளையும்
இரும்பென நின்று
எதிர்த்துநிற்கும்
கடலோர காடுகளாம்
மாங்குரோவ் காடுகள்....

சூறாவளியாய்
சுழன்று வரும் அலைகளையும்
எந்தச் சமயத்திலும்
எதிர்த்து நிற்கும்
சதுப்புநிலக் காடுகள்....

இப்படி
வேலியில்லாக் கரைக்குத்தான்
எத்தனை
பாதுகாப்பு அரண்கள்....

மனிதமனம்
விட்டுவைக்குமா?
இந்தக் காவல்மரங்களை....

மழலை கண்டு மயங்காத
மனித மனம் உண்டோ? ஏனோ
மரம் சிரித்து நின்றால்
மனித இனம் பொறுப்பதில்லை

தன் வாழ்நாளை
மரணத்தின் வாசலுக்குக் கொண்டு செல்லும்
விசித்திர இனம்- இந்த
மனித இனம்
வரம் தந்த சாமியின் தலையில்
கைவைத்த கதைபோல்- பலருக்கும்
வாழ்வுதந்த கடலன்னையும்
கயவர்கள் விட்டுவைக்கவில்லை....

இயற்கை தந்த
அரண்களை அழித்து
ஊர்பார்க்கு
உல்லாச விடுதிகள்
பொழுதுபோக்க
பூங்காக்கள்
இன்னும் அதிகமாய்
தொழிற்சாலைகள்....
இதெல்லாம்- சில
ஆதிக்க சக்திகளின்
அட்டூளியங்கள்...
ஒன்று
நினைவிருக்கட்டும்!
இயற்கையை
அழிப்பதென்பது
மனித வாழ்நாளை
வேரறுப்பது போன்றது....

இயற்கையே
வாழ்வின் ஆதாரம்!!
இயற்கையை அழிக்கும்
அறிவியலின்
ஆக்கம்
அழிவைத்தான் தரும்

இறைவன் தந்த
எழில் வாழ்வு மாறாதிருக்க
இயற்கைவளம் காக்க
மனிதவளம் சேர்ப்போம்!!!

ச. ஜெகதீஸ்வரி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை.

No comments:

Post a Comment